மூதாட்டியிடம் நகை பறிப்பு

அருப்புக்கோட்டையில் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றனர்.;

Update: 2022-07-10 19:31 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை ஆத்திபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி சண்முகவடிவு (வயது 65). இவர் அருப்புக்கோட்டை செல்வதற்காக நாராயணபுரம் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கசெயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சண்முகவடிவு கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்