நகராட்சி கவுன்சிலர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

அருப்புக்கோட்டையில் நகராட்சி கவுன்சிலர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2022-09-08 19:04 GMT

அருப்புகோட்டை,

அருப்புக்கோட்டை காட்டு பாவா தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(வயது 40). 10-வது வார்டு தி.மு.க. நகர்மன்ற உறுப்பினராகவும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை கவுன்சிலர் அப்துல் ரகுமான் சொந்த வேலையாக கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. யாரோ மர்ம ஆசாமி வீட்டின் பின்புற வழியாக வீட்டுக்குள் புகுந்து கதவை உட்புறமாக பூட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அப்துல்ரகுமான் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்