விருத்தாசலம் அருகேஓடும் பஸ்சில் பயணியிடம் 4 பவுன் நகை அபேஸ்

விருத்தாசலம் அருகே ஓடும் பஸ்சில் பயணியிடம் 4 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-29 18:45 GMT

விருத்தாசலம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தை சேர்ந்தவர் டேனியல் (வயது 42). இவர் நேற்று முன்தினம் விருத்தாசலம் கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் 4 பவுன் நகையை வாங்கி கொண்டு, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீ முஷ்ணம் செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தான் வைத்திருந்த நகை பையை பார்த்தபோது, அதில் இருந்த 4 பவுன் நகையை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ? பையில் இருந்த நகையை அபேஸ் செய்து, இறங்கிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகையை அபேஸ் செய்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்