ஜீப் கவிழ்ந்து விபத்து; 6 மாணவர்கள் படுகாயம்

பந்தலூர் அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-09-16 15:15 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே புஞசகொல்லியில் இருந்து காவயல், மழவன் சேரம்பாடி வழியாக நேற்று ஜீப் ஒன்று பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு அம்பலமூலா அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. காவயல் பகுதியில் சென்ற போது, ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் இருந்து உருண்டு விழுந்து மரத்தில் மோதி நின்றது. இதனால் மாணவர்கள் அச்சத்தில் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காயமடைந்த மாணவர்களை மீட்டனர். அபினயா, அகிலா, ரூபினி, சவுமியா, சர்மிளா, சரத்குமார் ஆகிய 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் எருமாடு, சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்