ஜீப்-கார் மோதல்; வனவர் உள்பட 8 பேர் படுகாயம்

காட்டுத்தீயை அணைக்க சென்ற போது ஜீப்-கார் மோதிய விபத்தில், வனவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-02-26 18:45 GMT

வால்பாறை, 

வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் 2-வது நாளாக காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. இதையடுத்து வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உதவுவதற்காக வனவர் முத்துமாணிக்கம் (வயது 50) தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஜான் பால் (28), டிரைவர் வினோத் (26), அய்யப்பன் (23), அரவிந்த் (29), மனோஜ்குமார் (26), விக்னேஸ்வரன் (23), கிறிஸ்டோபர் (23) ஆகியோர் நேற்று மாலை ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். சென்றுள்ளனர். வால்பாறை-அக்காமலை சாலையில் சமாதானபுரம் அருகே வளைவில் சென்ற போது, ஜீப் மீது வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வந்த கார் மோதியது. இதில் வனவர் உள்பட 8 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வினோத் மட்டும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்