நாமக்கல் மாவட்டத்தில் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 23 பேர் தேர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.;
இந்தியாவில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில், என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. நுழைவு தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்.
இத்தேர்வில் பங்கேற்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 92 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் ஒரு மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 23 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 9 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேவையான மதிப்பெண்கள் பெறவில்லை.
மீதம் உள்ள 14 பேர் திருச்சி என்.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பித்து வருகின்றனர். இந்த தேர்வில் நாமக்கல் மாவட்ட அளவில் மாணவி இலக்கியா முதலிடத்தையும், மாணவர் கவின்ராஜ் 2-வது இடத்தையும், மாணவர் ஆகாஷ் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.