என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.

Update: 2023-04-15 18:53 GMT

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு

நடப்பு கல்வியாண்டில் பிளஸ் -2 படிக்கும் மாணவர்கள், அடுத்து, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து என்ஜினீயரிங் படிக்க, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி, அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வு, 2 கட்டமாக நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஷிவானி என்ஜினீயரிங் கல்லூரி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எம்.ஏ.எம் என்ஜினீயரிங் கல்லூரி, திருச்சி- சேலம் சாலை துடையூரில் உள்ள மகாலெட்சுமி என்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட 3 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி அரசு விடுமுறை நாட்கள் தவிர நேற்று வரை 7 நாட்கள் நடைபெற்றது.

இந்த தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மற்றும் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை என 2 கட்டமாக நடைபெற்றது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்து தேர்வு எழுதும் வகுப்பறைக்குள் அனுமதித்தனர். இந்த தேர்வு முழுக்க கணினி வழியாக நடைபெற்றது.

793 பேர் தேர்வு எழுத வரவில்லை

7379 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 6 ஆயிரத்து 586 பேர் தேர்வு எழுதினர். 793 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வில் இந்திய தேசிய முகமை மூலமாக தேர்வு மைய அலுவலர் நியமிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த மாணவ-மாணவிகள் ஜே.இ.இ. தேர்வு எழுதினர்.

Tags:    

மேலும் செய்திகள்