விருதுநகர் மாவட்ட கலெக்டராக ஜெயசீலன் பொறுப்பேற்பு

விருதுநகர் மாவட்ட கலெக்டராக ஜெயசீலன் நேற்று பொறுப்பு ஏற்றார்.

Update: 2023-02-08 19:28 GMT


விருதுநகர் மாவட்ட கலெக்டராக ஜெயசீலன் நேற்று பொறுப்பு ஏற்றார்.

பொறுப்பேற்பு

1985-ம் ஆண்டு உதயமான விருதுநகர் மாவட்டத்தின் 24-வது கலெக்டராக ஜெயசீலன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை சேர்ந்த இவர் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்று தமிழில் முதுகலை பட்டம் பெற்றதுடன் சிறைத்தமிழ் என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

செய்தித்துறை இயக்குனர்

இவர் விழுப்புரத்தில் உதவி ஆட்சியராக பணியை தொடங்கி, செங்கல்பட்டு மாவட்டத்தில் சார் ஆட்சியராகவும், வீட்டு வசதி துறையில் துணைச்செயலாளராகவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றினார்.

இந்தநிலையில் செய்தித்துறையில் இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமனம் பெற்று பொறுப்பேற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்