ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய வளாக கூட்டரங்கில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற தீர்மான நகலை கணக்கர் தாமோதரன் வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரவு, செலவு கணக்கு குறித்தும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதம் நடத்தினர். கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் நன்றி கூறினார்.