ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

உடன்குடி பகுதியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-12-06 18:45 GMT

உடன்குடி:

உடன்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர்அணி தலைவர் குணசேகரன் ஏற்பாட்டில் சந்தையடித்தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் முருங்கைமகாராஜா, தலைமை பேச்சாளர் பொன் ஸ்ரீராம், முன்னாள் உடன்குடி யூனியன் துணைத்தலைவர் ராஜதுரை, உடன்குடி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ரெங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று சாயர்புரம் மெயின் பஜாரில் நகர அ.தி.மு.க. சார்பாக ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சாயர்புரம் நகர பஞ்சாயத்து 6-வது வார்டு இருவப்பபுரம்புது சுப்பிரமணியபுரத்தில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் முத்துமாரி தங்கராஜ், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் சிவனந்த பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், சாத்தான்குளம் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ்நிலையத்தில் நடந்த ்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டி தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். இதில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமணவேல், புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்டான்லி ஞானபிரகாஷ், ஒன்றிய அவைத் தலைவர்பரமசிவபாண்டியன், புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன், நகர பொருளாளர் செல்வேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேவ விண்ணரசி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று தட்டார்மடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய இளைஞரணி செயலர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சொக்கன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூடடுறவு கடன் சங்கத் தலைவர் பாண்டியராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய விவசாய பிரிவு பொருளாளர் ஜான்லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்