ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
சீர்காழியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் பி. வி. பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், நற்குணன், ரவிச்சந்திரன், சிவக்குமார், பேரூர் கிழக்கு செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் பொறியாளர் வினோத் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டசெயலாளர் எஸ். பவுன்ராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் அன்பழகன், ராஜ்குமாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்தி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து ஆயிரம் தென்னங்கன்றுகள், 600 சேலைகள் உள்ளிட்ட நல உதவிகளை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பக்கிரிசாமி, ஜெயலலிதா நகர செயலாளர் மணி, நகர பொருளாளர் மதிவாணன் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் எஸ்.கே. சுரேஷ் நன்றி கூறினார்.