ஜெயலலிதா பிறந்தநாள் விழா
சிவகிரியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி நகர அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ்நிலையம் அருகே காந்தி கலையரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அமைப்புச் செயலாளருமான மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிவகிரி நகரச் செயலாளர் காசிராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.