மதுரையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,300-க்கு விற்பனை

மதுரை பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,300 வரை விற்பனையானது.

Update: 2022-09-04 19:58 GMT

மதுரை, 

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,300 வரை விற்பனையானது. இதேபோல பிச்சிப்பூ கிலோ ரூ.600-க்கும், முல்லைப்பூ ரூ.800-க்கும், நாட்டு சம்பங்கி ரூ.400-க்கும் விலை போனது. செண்டுமல்லி ரூ.80, ரோஜா ரூ.150, அரளி ரூ.200, கோழிக்கொண்டை ரூ.40 என விற்பனையாகின.

சமீப காலமாக அடிக்கடி மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்து வருகிறது. ஆனால் கோவில் திருவிழாக்கள், ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களையொட்டி பூக்களின் விலை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்