ஜாம்ஸ் மரைன் கல்லூரி மாணவர்கள் சாதனை
ஜாம்ஸ் மரைன் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
திசையன்விளை:
இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் கீழ் இயங்கி வரும் டைரக்டர் ஜெனரல் ஆப் ஷிப்பிங் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட மரைன் கல்லூரிகளுக்கு அகில இந்திய அளவிலான ஜி.பி.ரேட்டிங் பி.இ.எஸ்.எக்சிட் தேர்வு நடந்தது.
இதில் திசையன்விளை அருகே பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரி மாணவர்கள் 118 பேர் தேர்வு எழுதினர். இதில் 65 மாணவர்கள் அகில இந்திய அளவில் ரேங்க் பெற்று சாதனை படைத்தனர். ஜி.பி.ரேட்டிங்கில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி தாளாளர் வி.எஸ்.கணேசன், செயலாளர் எஸ்.ஜி.ராஜேஷ், நிர்வாக பிரதிநிதி அண்டோ எபி பெனி மற்றும் கேப்டன்கள், மாணவர்கள் பாராட்டினர்.