19-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம்

ஆரணி தாலுகாவில் 19-ந் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது.

Update: 2023-05-15 12:41 GMT

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்முருகேஷ் உத்தரவின் பேரில் 2022-23-ம் ஆண்டின் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஆரணி தாலுகா அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்குகிறார்.

19-ந் தேதி கண்ணமங்கலம் உள்வட்டத்துக்குட்பட்ட கிராம பகுதிட பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது,

22-ந் தேதி அக்ராபாளையம் உள்வட்ட கிராம பகுதிகளில் இருந்தும், 23-ந் தேதி முள்ளிப்பட்டு உள் வட்டத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இருந்தும், 24-ந் தேதி எஸ்.வி.நகரம் உட்வட்ட கிராம பகுதிகளில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது.

தொடர்ந்து 25-ந் தேதி ஆரணி நகர உள்வட்டத்தில் உள்ள பகுதிகளில் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது.

குறை மனுக்களை பெற்று 25-ந் தேதி விவசாயிகள் மாநாடு நடக்கிறது.

ஜமாபந்தி முகாமிற்கான ஏற்பாடுகளை தாசில்தார் ரா.மஞ்சுளா, மண்டல துணை தாசில்தார்கள், தலைமை இடத்து தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்