கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடந்தது. 31 கிராமப்பகுதிகளிலுள்ள வருவாய் கணக்குகளை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, ஆய்வு செய்தார்.
கடையநல்லூர் தாசில்தார் சண்முகம், கலெக்டர் அலுவலக மேலாளர் அழகப்ப ராஜா, கடையநல்லூர் செட்டில்மென்ட் தாசில்தார் ராமலிங்கம், புளியங்குடி செட்டில்மென்ட் தாசில்தார் பாலசுப்பிரமணியன், கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜாமணி, துணை தாசில்தார் சுடலை, சர்வேயர் சாகுல் ஹமீது, வருவாய் ஆய்வாளர் காசி லட்சுமி, புளியங்குடி வருவாய் ஆய்வாளர் சேகர், ஆய்க்குடி வருவாய் ஆய்வாளர் சங்கரஈஸ்வரி ஆகியோர் கலந்து ெகாண்டனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, மனுக்களை கொடுத்தனர். பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.