திருக்கோவிலூர் தாலுகாவில் ஜமாபந்தி

திருக்கோவிலூர் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது.;

Update: 2023-06-05 18:45 GMT

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஏஞ்சல் தலைமையில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது.

இதில் நேற்று பெறப்பட்ட 87 மனுக்களில் உடனடியாக ஒரு நபருக்கு பட்டா நகல் ஒப்படைக்கப்பட்டது. முகாமில் திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாம் வருகிற 9-ந்தேதி வரைக்கும் நடக்கிறது.

எனவே திருக்கோவிலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தில் வசிக்கும் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை, ஜமாபந்தியில் கொடுத்து பயன்பெறுமாறு திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்