சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி

சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி 16-ந் தேதி தொடங்குகிறது

Update: 2023-05-14 19:00 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் தணிக்கை எனும் ஜமாபந்தி முகாம் 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஜமாபந்தி அதிகாரியாக மாவட்ட தீர்வாய அலுவலரும், மாவட்ட கலெக்டருமான செந்தில்ராஜ் பங்கேற்கிறார். தாலுகா அலுவலகத்தில் தினமும் காலை 10 மணிக்கு முகாம் தொடங்குகிறது.

முதல் நாளான 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் உள் வட்டத்துக்கு உட்பட்ட மீரான்குளம், 1, 2, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், கட்டாரிமங்கலம், பழங்குளம் ஆகிய கிராமத்துக்கும், 17-ந் தேதி (புதன்கிழமை) பிடானேரி, எழுவரைமுக்கி கிராமம், பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டியிருப்பு, புதுக்குளம், ஆகிய கிராமத்துக்கும் நடைபெறுகிறது.

18-ந் தேதி (வியாழக்கிழமை) நெடுங்குளம், கோமானேரி, கொம்பன்குளம், தச்சமொழி, முதலூர், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஆகிய கிராமத்துக்கும், 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, அரசூர் பகுதி 1, 2, திருப்பணி புத்தன்தருவை, படுக்கப்பத்து ஆகிய கிராமத்துக்கும் நடக்கிறது.

ஆதலால் கிராம மக்கள் தங்களது நிறைவேறாக நீண்ட கால மனுக்கள், பிரச்சினைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கேட்டும் விண்ணபிக்கலாம். முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்