ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ஜமாபந்தி

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ஜமாபந்தி வரும் 16-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2023-05-11 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பொதுமக்கள் வருவாய்த்துறை கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டும், கிராம மக்களிடம் நலத்திட்ட உதவிகள் சம்பந்தமான குறைகளை தீர்க்கும் வகையில் ஜமாபந்தி கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. ஜமாபந்தி தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

முதல்நாள்(செவ்வாய்க்கிழமை) எப்போதும்வென்றான் குறுவட்டத்தைச் சேர்ந்த வாலசமுத்திரம், சிந்தலகட்டை, கே.சண்முகபுரம், எஸ்.குமாரபுரம், எப்போதும்வென்றான், ஜெகவீரபாண்டியபுரம், காட்டுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், 17-ந் தேதி எப்போதும்வென்றான் குறுவட்டத்தைச் சேர்ந்த சந்திரகிரி, ஆதனூர், கொல்லம்பரும்பு, கச்சேரிதளவாய்புரம், முள்ளூர்முத்துகுமாரபுரம் கிராமங்கள் மற்றும் மணியாச்சி குறு வட்டத்தைச் சேர்ந்த சவரிமங்கலம், மேலபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களுக்கும் நடக்கிறது. வருகிற 18-ந் தேதி மணியாச்சி குறுவட்டத்தைச் சேர்ந்த ஒட்டநத்தம், மணியாச்சி, சங்கம்பட்டி, அக்கநாயக்கன்பட்டி, கொடியங்குளம், பாறைக்குட்டம், முறம்பன் ஆகிய கிராமங்களுக்கும்,

19-ந் தேதி பரிவல்லிக்கொட்டை குறுவட்டத்தைச் சேர்ந்த மலைப்பட்டி, பரிவல்லிக்கொட்டை, கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு நாரைக்கிணறு, கோவிந்தாபுரம், கீழக்கோட்டை வேடநத்தம் குறுவட்டத்தைச் சேர்ந்த தருவைகுளம் ஆகிய கிராமங்களுக்கும் நடக்கிறது. வருகிற 23-ந் தேதி(செவ்வாய்கிழமை) வேடநத்தம் குறுவட்டத்தைச் சேர்ந்த வேடநத்தம், தெற்குகல்மேடு, மேலஅரசடி, கீழஅரசடி, புதூர்பாண்டியாபுரம், வேப்பலோடை, பட்டிணமருதூர் ஆகிய கிராமங்களுக்கும், 24-ந் தேதி வேடநத்தம் குறுவட்டத்தைச் சேர்ந்த மேலமருதூர், டி.துரைச்சாமிபுரம், பசுவந்தனை குறுவட்டத்தை சேர்ந்த பசுவந்தனை, கீழமங்கலம், வெங்கடேஸ்வரபுரம், கீழமுடிமன், மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது. வருகிற 25-ந் தேதி பசுவந்தனை குறுவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கபுரம், குமரெட்டியாபுரம், வெள்ளாரம், பி.துரைச்சாமிபுரம், சில்லாங்குளம், ஓட்டப்பிடாரம் குறுவட்டத்தை சேர்ந்த சில்லாநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களுக்கும், 26-ந் தேதி ஓட்டப்பிடாரம் குறுவட்டத்தைச் சேர்ந்த சாமிநத்தம், புதியம்புத்தூர், ஜம்புலிங்கபுரம், ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, ஓட்டப்பிடாரம் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது. இதில் அந்தந்த பகுதி பொதுமக்கள் குறைகளை மனுக்கள் மூலமாக கொடுத்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்