ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி

நன்னிலத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி

Update: 2023-05-31 18:45 GMT

நன்னிலம்:

நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக ஜமாபந்தி நடைபெற்று வந்தது. ஜமாபந்தி நிறைவு நாளையொட்டி நன்னிலம், நல்லமாங்குடி, ஆணைக்குப்பம், சலிப்பேரி, ஸ்ரீவாஞ்சியம், வடகுடி, அச்சுதமங்கம், தட்டாத்திமூலை உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை பட்டா மாற்றம் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். இந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் வழங்கினார். நிகழ்ச்சியில் நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், தலைமை இடத்து துணை தாசில்தார் கருணாமூர்த்தி வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்