கலவை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

கலவை தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-24 11:40 GMT

கலவை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. இதனை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்து மரக்கன்று நட்டார். இந்த ஜமாபந்தியில் வருவாய்த் துறையின் மூலம் பராமரிக்கப்படும் 24 வகையான கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது. நிலவரி நீர் தீர்வு, கிராம கணக்கு, பயிர் சாகுபடி, பட்டா பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு தீர்வு காணப்படுகிறது. வருகிற 26-ந்் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. இதில் கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவு நாளில் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்க உள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மதிவாணன், கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாபு, வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நவாஸ், மண்டல துணை தாசில்தார் தேவராஜ், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிகள் ஸ்ரீதர், தீனதயாளன், விஜி, ராணி, கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்