சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.;
சிவகிரி:
தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. வாசுதேவநல்லூர் குறு வட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியாபுரம், வாசுதேவநல்லூர், தாருகாபுரம், தேசியப்பட்டி என்ற நாரணபுரம் பகுதி 1, பகுதி 2, அருளாட்சி என்ற திருமலாபுரம் ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடந்தது. இதில் சிவகிரி தாசில்தார் ஆனந்த், தலைமையிடத்து துணைத்தாசில்தார் சரவணன், நில எடுப்பு தாசில்தார் ரவிக்குமார், வருவாய் அலுவலர்கள் வள்ளியம்மாள் (வாசுதேவநல்லூர்), செல்வகுமார் (சிவகிரி), கோபால கிருஷ்ணன் (கூடலூர்), கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.