சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
ஜமாபந்தி
சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் 1432-ம் வருவாய் பசலிவருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாஙகி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு வருடமும் தாலுகாவில் வருவாய் கிராமங்களில் உள்ள கணக்குகளை முடிக்கும் நிகழ்வே இந்த வருவாய் தீர்வாயம் ஆகும். ஒவ்வொருவருவாய் கிராமத்தின் கணக்குகளை சரிபார்த்து அந்த வருவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் குறைகளுக்கு நடவடிக்கை
சாத்தான்குளம் தாலுகாவில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 250 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மீதமுள்ள பட்டா, உதவித்தொகை கேட்ட மனுக்களுக்கும் தீர்வு காணப்படும். உங்கள் குறைகளுக்கு தொடந்து நடவடிக்கை எடுக்கின்றோம். நீங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புதர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கண்ணன், சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்க தலைவர் லூர்துமணி, மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.