மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2024-01-09 09:21 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்விக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு,

இந்த மாத இறுதியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழா அன்று மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அடுத்த படியாக 4-வது ஜல்லிக்கட்டு                போட்டியாக நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு உலக தரத்தில் இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். தென்னக மக்கள் பாராட்டும் வகையில் இந்த மைதானம் திறப்பு விழா நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்