ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்

திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளைகள் சீறி பாய்ந்தன. அதை காளையர்கள் அடக்கினார்கள். மாடு முட்டியதில் 36 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-05-14 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளைகள் சீறி பாய்ந்தன. அதை காளையர்கள் அடக்கினார்கள். மாடு முட்டியதில் 36 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. முன்னதாக கோட்டாட்சியர் பால்ராஜ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 3 குழுக்களாக பிரித்து அனுமதிக்கப்பட்டனர்.

பரிசு

இதில் ஒரு சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் சென்றன.

இதில் மாடுபிடி வீரர்களுக்கும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, அண்டா முதலியன பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் 36 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 7 பேர் பொன்னமராவதி மருத்துவமனைக்கும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விழா ஏற்பாடுகளை பூலாங்குறிச்சி ஜல்லிக்கட்டு குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்