ஜலநாத ஈஸ்வரர் கோவில் தேரோட்டம்

தக்கோலத்தில் ஜலநாத ஈஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-01 18:10 GMT

தக்கோலம் கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று ேதரோட்டம் நடந்தது. இதில் தக்கோலம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக தேரில் சாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பிரம்மோற்சவ விழா வருகிற 6-ம் தேதி வரை நடக்கிறது.

தக்கோலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் தீபன் சக்ரவர்த்தி, தலைமையில் சிறப்பு போலீசார் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்