3 வாலிபர்களுக்கு சிறை தண்டனை

சுவாமிமலை அருகே ஆடு திருடிய வழக்கில் 3 வாலிபர்களுக்கு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-06-13 20:38 GMT

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே ஆடு திருடிய வழக்கில் 3 வாலிபர்களுக்கு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆடு திருடிய 3 பேர் கைது

சுவாமிமலை அருகே சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் தனபால். இவர் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி தனது ஆடு ஒன்றை காணவில்லை என சுவாமிமலை போலீசில்புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டை திருடி சென்ற சுந்தரப்பெருமாள் கோவில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திருமேனி மகன் ஸ்ரீதர் (வயது24),அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சந்தோஷ் (21), தாராசுரம் பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மாதவன் மகன் சுபாஷ் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆட்டை பறிமுதல் செய்தனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பில் சுபாசுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஸ்ரீதர் மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு தலா ஒரு மாத சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இவர்கள் அபராதம் கட்ட தவறினால் மேலும் 9 மாத சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். சுபாஷ் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்