திருட்டு வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை

திருட்டு வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-01-04 19:10 GMT

திருக்குறுங்குடியை சேர்ந்த அருண்குமார் (வயது 24) மற்றும் வள்ளியூரை சேர்ந்த மதன் (26) ஆகியோர் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நெல்லை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அருண்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மதனுக்கு 48 நாட்கள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்