விபத்து வழக்கில் டிரைவருக்கு ஜெயில்
விபத்து வழக்கில் டிரைவருக்கு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
ராசிபுரம்:-
ராசிபுரம் பட்டணம் ஏரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 35). இவர், கடந்த 2015-ம் ஆண்டு ராசிபுரம் கோனேரிப்பட்டி அருகே பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவர் அசோக்குமார் (வயது 47) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நேற்று குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரெஹினா பேகம் தீர்ப்பு கூறினார். லாரி டிரைவர் அசோக்குமாருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அதேபோல் மங்களபுரம் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் சுப்பிரமணி என்பவர் மரணம் அடைந்தார். இதுசம்பந்தமாக மங்களபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திய ரஞ்சித் என்பவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.