2 பேருக்கு சிறை

போலி ஆவணம் தயாரித்து வீடு மோசடி செய்த 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து நெல்லை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது

Update: 2022-09-30 21:12 GMT

நெல்லை டவுன் சைலப்பர் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் மேலப்பாளையத்தில் 2 வீடுகளை வாங்கி இருந்தார். இந்த வீடுகளை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்து விட்டது கணேசனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இதுகுறித்து விசாரித்து மேலப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்த சிவனு (வயது 59), இவருடைய மகன் முருகன் (20) மற்றும் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த மணி (40) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை நில அபகரிப்பு தடுப்பு வழக்குகள் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி பாக்கியராஜ் வழக்கை விசாரித்து முருகன் மற்றும் மணி ஆகியோருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

சிவனு வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பிரமணியன் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்