வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே கற்படை கிராமத்தில் கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 17.10.2020 அன்று உண்டியலை உடைத்து ரூ.4 ஆயிரத்து 800 திருடியதாக கல்லலை சேர்ந்த முத்து (வயது 48) என்பவரை வேலாயுதப்பட்டினம் போலீசார் கைது செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி மாரிமுத்து, கோவில் உண்டியலை உடைத்து திருடிய முத்துவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்வேலன் ஆஜர் ஆனார்.