கார் டிரைவருக்கு 1 ஆண்டு சிறை

விபத்தில் 5 பேர் பலியானது தொடர்பாக கார் டிரைவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-08-30 17:24 GMT

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 55). கார் டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே காரை ஓட்டி சென்றார். அப்போது அந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மொத்தம் 5 பேர் பலியான இந்த விபத்து தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தர்மபுரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. காரை கவன குறைவாக ஓட்டியதால் இந்த விபத்து நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் ரவிக்குமாருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.57 ஆயிரம் அபராதம் விதித்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கணேசன் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்