கார் டிரைவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை
கார் டிரைவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
திருமங்கலம்,
கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந்் தேதி திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டி விலக்கு அருகே சாலையை கடந்து சென்ற சீனிவாசன் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருமங்கலம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் காரை ஓட்டி வந்த மதுரை அய்யர்பங்களா பகுதியை சேர்ந்த சண்முகராஜன் (வயது 57) என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகராஜா உத்தரவிட்டார்.