2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை

2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update:2022-05-26 02:32 IST

மதுரை, 

மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 15 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட பெண், மனநலம் குன்றிய பயிற்சி பள்ளிக்கு சென்று விட்டு கடந்த 2010-ம் ஆண்டு வீடு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்து, ரவிச்சந்திரன் என்பவர் உள்பட 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரை தொடர்ந்து கற்பழிப்பு உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரன், சேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகிளர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், ரவிச்சந்திரன் மற்றும் சேகருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்