இளம்பெண் பலாத்காரம்; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-05-20 17:29 GMT

மதுரை, 

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்த கவுல்பட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 34). இவர் கடந்த 2013-ம் ஆண்டில் 19 வயது இளம்பெண் ஒருவரிடம் பழகியுள்ளார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலாத்காரம் செய்துள்ளார். பலமுறை இதுபோல அந்த பெண்ணிடம் நடந்து கொண்டதால், அவர் கர்ப்பமானார்.

இதையடுத்து கருவையும் கலைக்கச்செய்துள்ளார். ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து அந்த இளம்பெண் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் காவேரி சாந்தி ஆஜரானார். விசாரணை முடிவில் கோபாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிருபாகரன்மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்