வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்

வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது.

Update: 2022-10-22 19:28 GMT

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். வெல்லம் தயாரிப்பு ஆலை அதிபர்கள் வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை என தயாரிக்கின்றனர் .தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

வாங்கிய வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர் . இந்நிலையில் வரும் திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை வரயிருப்பதால் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வெல்ல சிற்பங்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் வெல்லம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அதனை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்முரமாக நடந்து வருகிறது. அவ்வப்போது வியாபாரிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்