நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், முத்தனூர், கவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ.1,180-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,140-க்கும் விற்பனையானது. தொடர் மழையின் காரணமாக வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.