ஜெகத்ரட்சக பெருமாள் கோவில் குடமுழுக்கு

ஜெகத்ரட்சக பெருமாள் கோவில் குடமுழுக்கு நடந்தது

Update: 2022-06-03 21:09 GMT

அய்யம்பேட்டை

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே திருக்கூடலூர் கிராமத்தில் ஜெகத்ரட்சக பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நிறைவுபெற்று சிற்பங்களுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி 8 கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. விழாவிற்கு தெலுங்கானா மாநிலம் திருத்தண்டி நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள், திருக்கோவிலூர் மாதவன் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஹரிஷ்குமார், தக்கார் குணசுந்தரி, ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.






Tags:    

மேலும் செய்திகள்