ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-05 18:45 GMT

தூத்துக்குடியில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

தூத்துக்குடி மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தே.முருகன், சு.செல்வராஜ், செ.கணேசன், கே.சீனி, எம்.மாரிப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்

போராட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் பலா் திரளாக கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.வெங்கடேஷ் நிறைவுரையாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்