ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update:2023-03-25 00:15 IST

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேஷ், சிவக்குமார், அறிவழகன், செல்வக்குமார், சிங்காரம், தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முதல் நான்குமுனை சந்திப்பு வரை ஒருவருக்கொருவர் கைகோர்த்து நின்றவாறு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் கோவிந்தன், செல்லையா, சுந்தரமூர்த்தி, அண்ணாமலை, தினகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்