20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-03-25 00:15 IST

கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு குழு சார்பில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். ஊக்க ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் மாட்டிக் கொண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் ஒருவருக்கொருவர் கைகளை பிடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்செல்வராஜ் உள்பட 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்