ஜாக்டோ ஜியோ ஆலோசனை கூட்டம்

நெல்லையில் ஜாக்டோ ஜியோ ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-02-07 19:17 GMT

நெல்லையில் ஜாக்டோ -ஜியோ (ஆசிரியர்-அரசு ஊழியர்) கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி, பால் கதிரவன், ஜான் பாரதிதாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஐவன் பிரகாஷ், பிரம்மநாயகம், ஆழ்வார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானம்மாள் வரவேற்றார்.

கூட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை அணி திரட்டி மாவட்ட தலைநகரில் ஆயத்த மாநாடு நடத்த வேண்டும். மார்ச் மாதம் 5-ந் தேதி மாவட்ட தலைநகரில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும். மார்ச் மாதம் 24-ந் தேதி தாலுகா தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிர்வாகிகள் விக்னேஷ் ராஜா, அப்துல் ரகுமான், சையது யூசுப், அகஸ்டின், மாரியப்பன், மணிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் சாம் மாணிக்கராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்