ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-05 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு உயர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்