ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு

கடலூரில் ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது.

Update: 2023-02-19 18:45 GMT

கடலூர்,

ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு கடலூரில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் அரிகிருஷ்ணன், முருகன், அம்பேத்கர், குணசேகரன், மணவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேதரத்தினம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குமரவேல், மாவட்ட துணை தலைவர் வெங்கடாசலம், அரசு பணியாளர் சங்கம் நல்லதம்பி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் விஜயபால், அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தம்பிராஜன், தமிழ்மணி, குமரகுருநாதன், மணவாளன், இளங்கேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட நிதி காப்பாளர் சிற்றரசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்