இசக்கிஅம்மன் கோவில் கொடை விழா
உடன்குடி இசக்கிஅம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
உடன்குடி:
உடன்குடி இசக்கியம்மன் கோவில் ஆடிக்கொடை விழா கடந்த 24-ந்தேதி காலை 10மணிக்கு இசக்கியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு நாட்டில் நல்ல கன மழை வேண்டியும், குளங்கள், கண்மாய்கள் முழுமையாக நிரம்ப வேண்டியும் பெண்கள் பாடல்கள் பாடி சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவு 10மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, மறுநாள் காலை 10 மணிக்கு வில்லிசை, காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 1 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12மணிக்கு சிறப்பு தீபாராதனை, 3-வது நாள் காலை 10மணிக்கு சிறப்பு தீபாராதனை, காலை 11மணிக்கு கோவில் சார்பாக சமபந்தி அன்னதானம் நடந்தது. இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.