அத்தப்பூ கோலப்போட்டி
அய்யன்கொல்லி அரசு பள்ளியில் அத்தப்பூ கோலப்போட்டி நடந்தது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அரசு உண்டு உறைவிட பள்ளியில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அத்தப்பூ கோலப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா தலைமை தாங்கினார். பள்ளி மாணவிகள் பல வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியைகள் ரூபினி, ரேகா, சுந்தரம்பாள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.