'இது பெரிய சாதனை' - பார்முலா4 கார்பந்தயத்துக்கு நடிகர் நாக சைதன்யா பாராட்டு

பார்முலா4 கார்பந்தயத்துக்கு நடிகர் நாக சைதன்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-01 16:16 GMT

சென்னை,

இந்த ஆண்டுக்கான பார்முலா4 கார்பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்று போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி சென்னை தீவு திடலை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சாலை பந்தயத்திற்கான ஓடுதளமாக மாற்றப்பட்டது. தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்டிரீட் சர்க்யூட்டில் நடக்கும் இந்த போட்டிக்காக இரவிலும் பகல்போல் ஜொலிக்கும் வகையில் இருபுறமும் மின்னொளி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களுக்காக சுவாமி சிவானந்தா சாலையில் 5 இடங்களில் பிரத்யேக இருக்கைகள் அமைக்கப்பட்டன.

நேற்று இரவு பார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நடைபெற்றது. இன்று காலை தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. தற்போது, பார்முலா 4 கார் பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பந்தயத்தை காண பிரபலங்கள் பலர் வந்திருக்கின்றனர். அதன்படி, நடிகர் நாக சைதன்யா, யுவன் சங்கர் ராஜா, ஜான் ஆபிரகாம், நடிகை திரிஷா உள்ளிட்ட பலர் வந்தனர்.

இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இது பெரிய சாதனை என்று தெரிவித்துள்ளார், அவர் கூறுகையில்,

'ரொம்ப நல்லா இருக்கிறது. வெளிநாடுகளில் நிறைய நைட் ரேஸ் பார்த்திருக்கோம். ஆனா சென்னைல நைட் ரேஸ் என்பது ஒரு பெரிய சாதனை. இந்தியாவில் நிறைய ரேஸர்ஸ் இருக்கிறார்கள். வாய்ப்புகளை எதிர்நோக்கி நிறைய இளம் ரேஸர்ஸ் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்,' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்