ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் ஆகும்.;

Update: 2022-08-24 18:56 GMT

தமிழ்நாடு தனியார் ஐ.டி.ஐ. சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், ஸ்ரீஆதிசங்கரர் கல்வி குழும தலைவருமான டாக்டர் எம்.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-ம் ஆண்டிற்கு ஐ.டி.ஐ. சேர்க்கை பெற விரும்பும் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அரசு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (வியாழக்கிழமை) கடைசிநாளாகும். தேர்வு பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டு, 27-ந் தேதி மற்றும் 29-ந் தேதி சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்