ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்த ஆரிப்பின் மகன் அப்துல் லத்திப் (வயது 17). இவர் தனியார் ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்துல் லத்திப் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். வீட்டில் புதிய செல்போன் வாங்கி கொடுக்காததால் மனவேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.