கோவையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 250 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன

கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

Update: 2022-09-04 15:25 GMT


கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி

கோவை மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாநகரில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக 489 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் முதல் கட்டமாக கடந்த 2-ந் தேதி கோவை மாநகரில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்ட 222 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குனியமுத்தூர் குளம், குறிச்சிகுளம் மற்றும் சிங்காநல்லூர் குளங்களில் கரைக்கப்பட்டன.

250 சிலைகள் கரைக்கப்பட்டன

இதைத்தொடர்ந்து  250 விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டன. குளக்கரை ஓரம் நின்ற தீயணைப்பு வீரர்கள் விநாயகர் சிலைகளை வாங்கி குளத்தில் கரைத்தனர்.

முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் விநாயகர் சிலை மீது பூக்களை தூவி வணங்கினர். விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் விசர்ஜனத்திற்காக கோவை மாநகர போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

போலீசாருடன் இணைந்து அதிவிரைவு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்தை போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்